10-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு ஆலங்குடி மையத்தில் கல்வி அதிகாரி ஆய்வு

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் உதவித்தொகை மற்றும் மேல்படிப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் தேசிய திறனாய்வு தேர்வு நடக்கிறது.

Update: 2018-11-04 22:30 GMT
புதுக்கோட்டை,

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் உதவித்தொகை மற்றும் மேல்படிப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் தேசிய திறனாய்வு தேர்வு நடக்கிறது. அதன்படி நேற்று புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விராலிமலை, கீரனூர், கந்தர்வக்கோட்டை, திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 12 மையங்களில் திறனாய்வு தேர்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் 2 ஆயிரத்து 613 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், 2 ஆயிரத்து 339 மாணவ, மாணவிகளே தேர்வு எழுதினார்கள். 274 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. ஆலங்குடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையங்களை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா ஆய்வு செய்தார். இதேபோல புதுக்கோட்டையில் மாவட்ட கல்வி அதிகாரிகள், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் உதவித்திட்ட அதிகாரி, முதன்மைக்கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் மற்றும் பள்ளித்துணை ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட பறக்கும் படையினர் தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்