கடன் தொல்லையால் பூ கட்டும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் பூ கட்டும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-01 19:23 GMT
பெருமாநல்லூர்
கடன் தொல்லையால் பூ கட்டும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
பூ கட்டும் தொழிலாளி
பெருமாநல்லூர் அருகே உள்ள வாஷிங்டன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் வயது 47. இவரது மனைவி தேவி 40. இருவரும் பூ கட்டும் தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு திருமண வயதில் 2 மகள்களும், கல்லூரி செல்லும் ஒரு மகனும் உள்ளனர். 
இந்த நிலையில் சுரேஷ் வங்கியில் கடன் பெற்று ரூ.15 லட்சத்தில் வீடு கட்டியதாக தெரிகிறது. மேலும் கடன் பிரச்சினையும் இருந்ததாக கூறப்படுகிறது. மகள்களுக்கு திருமண வயது வந்தும், போதிய பணம் இல்லாத காரணத்தினால் திருமணம் செய்து வைக்க முடியாமல் இருந்ததாகவும் தெரிகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை 
பூ கட்டும் தொழிலும் சரியாக இல்லாத காரணத்தினாலும், வாங்கிய வங்கி கடனை செலுத்த முடியாததாலும் சுரேஷ் மன உளைச்சலில் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேஷ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில், சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்து வந்த பெருமாநல்லூர் போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்