ரொட்டி சாப்பிட்ட இரு குழந்தைகள் உயிரிழப்பு... போலீசார் விசாரணை

விஷம் கலந்த உணவை சாப்பிட்டதன் காரணமாக குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.;

Update:2024-03-24 22:52 IST

சத்தீஸ்கர்,

சத்தீஸ்கர் மாநிலம் உர்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிதாரி கிராமத்தில் வசிப்பவர் ஷரவன் குமார். இவருக்கு ராஜ்குமாரி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் வழக்கம்போல காலை தனது தேநீரும், ரொட்டியும் சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அனைவரும் வாந்தி எடுத்ததுடன், மயக்கமடைந்தனர்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோர்பா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விஷம் கலந்த உணவை சாப்பிட்டதன் காரணமாக குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைகள் சாப்பிட்ட தேநீர் மற்றும் ரொட்டியை ஆய்வுக்காக அனுப்பிவைத்துள்ள போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்