போனில் விவாகரத்து ஷேக்கிற்கு மனைவியை விற்ற கணவன்!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர், தன் மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்கு 'தலாக்' சொல்லி விவாகரத்து செய்தது மட்டுமின்றி, அவரை ஒரு ஷேக்கிற்கு விற்றுவிட்டதாகக் கூறியுள்ளார்.

Update: 2017-05-29 06:24 GMT

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஒமர். இவர் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் தங்கி பணியாற்றி வருகிறார். இவருக்கும் சாயிரா பானு என்பவருக்கும், கடந்த 2014ல் திருமணம் நடந்தது. இதையடுத்து, வேலைக்காக சவுதி சென்ற ஒமர், சொந்த ஊருக்கு வரும்போது சாயிரா பானுவை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டு வேலைக்காக சாயிரா பானுவை ரியாத்துக்கு அழைத்து சென்ற ஒமர், அங்குள்ள ஒரு ஷேக் வீட்டில் தங்கி வேலை செய்யும்படி கூறியுள்ளார். இதையடுத்து, சாயிரா பானுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒமர், நான் உன்னை ஷேக்குக்கு விற்று விட்டேன். இப்போது உன்னை விவாகரத்து செய்கிறேன்' என கூறி தொலைபேசியில், 'தலாக்' சொல்லி விவாகரத்து செய்துள்ளார்.

இதையடுத்து, சாயிரா பானுவின் பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சாயிராவின் பெற்றோர், சவுதியில் உள்ள தன் மகளை மீட்க உதவி செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்