குஜராத் உச்சி மாநாடு தொடங்கியது பிரதமர் மோடி, முகேஷ் அம்பானி பங்குபெற்றனர்

குஜராத் உச்சி மாநாடு தொடங்கியது. பிரதமர் மோடி, முகேஷ் அம்பானி, உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #VibrantGujaratSummit

Update: 2019-01-18 06:37 GMT
காந்திநகர்

குஜராத் மாநிலம் மகாத்மா மந்திர் சந்திப்பில் ஒன்பதாவது  குஜராத் உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் அரசியல் தலைவர்கள் மற்றும் பெரிய நிறுவன அதிபர்கள்  கலந்து கொண்டனர்.

உஸ்பெகிஸ்தான் மற்றும் ருவாண்டா அதிபர்கள்  ஷாவத் மிர்ஜியோவ் மற்றும் பால் ககாமி ஆகிய தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிரதமர் மோடியுடன் இருவரும் அமர்ந்து உள்ளனர். இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

செக் குடியரசின் பிரதமர் ஆண்ட்ரேஜ் பாபிஸ், டென்மார்க் பிரதமர் லார்ஸ் லோகே ரஸ்முசென் மற்றும் மால்டா குடியரசு பிரதமர்  ஜோசப் மஸ்கட் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, தீபக் பரிக், சந்திர சேகரன், உதய் கோடக், கேஎம். பிர்லா, பிகே கோயங்கா உள்பட பல கார்ப்பரேட் நிறுவன தலைவர்கள் கலந்து கொண்டனர்.

குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி வரவேற்று பேசினார்.

இந்த 3 நாள் மாநாட்டில் ரூ.33,500 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகும்  என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாநாட்டில் ரூ.25,578  கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

மேலும் செய்திகள்