ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு: மராட்டியத்தில் 9 பேர் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் மராட்டியத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-01-23 06:49 GMT
மும்பை,

தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி  மராட்டிய மாநிலத்தில்  9 பேரை மராட்டிய பயங்கரவாத தடுப்பு படை (ஏடிஎஸ்) கைது செய்துள்ளது. கடந்த இரு தினங்களாக நடத்திய தேடுதல் வேட்டையில் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டுள்ள ஒன்பது பேரையும், கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த சில வாரங்களாகவே கண்காணித்து வந்ததாகவும், இவர்கள் தங்கள் திட்டத்தை செயல்படுத்த தயார் ஆன போது, அதிரடியாக கைது செய்யப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அம்ருத் நகர், கவுசா, மோடி பக், அல்மாஸ் காலனி ஆகிய இடங்களில் நேற்று இரவு நடத்திய சோதனைக்கு பிறகு, மேற்கூறிய 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனையின் போது ரசாயனங்கள், ஆசிட் பாட்டில்கள், கூர்மையான ஆயுதங்கள், மொபைல் போன்கள், ஹார்டு டிஸ்குகள், சிம் கார்டுகள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றச்சதி, உபா உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்