இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100% அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மாதத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

Update: 2020-09-29 04:56 GMT
புதுடெல்லி

இந்தியாவில் ஒட்டுமொத்த கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகமாக காணப்பட்டாலும், கடந்த ஒரு வாரத்தில் நாட்டில் புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் குறைந்து வருகின்றன. 

கடந்த மாதத்தில் இந்தியாவில் 100 சதவீதம் குணமாவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மொத்த பாதிக்கபட்டவர்களில்  82 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் (50 லட்சத்திற்கு மேல்) குண்மாகி வீடு திரும்பி உள்ளனர்.

சிகிச்சையில் உள்ள பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் குறைவானது) மொத்த பாதிப்பிப்புகளில் ஒரு சிறிய விகிதம் (1/5 க்கும் குறைவானது) என சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


மேலும் செய்திகள்