மராட்டியத்தில் டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு 66 ஆக உயர்வு

மராட்டியத்தில் டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு 66 ஆக உயர்வடைந்து உள்ளது.

Update: 2021-08-13 20:50 GMT


புனே,

நாட்டில் கொரோனா பாதிப்புகளில் முதல் இடத்தில் மராட்டியம் உள்ளது.  இதனை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்த முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு  ஊரடங்கு தளர்வுகளில் மாற்றம் கொண்டு வந்து உள்ளது.

இதன்படி வருகிற 15ந்தேதி முதல் அங்கு இரவு 10 மணி வரை, அனைத்து நாட்களிலும் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு 200 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர, உடற்பயிற்சி கூடங்கள், சலூன்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது.  எனினும், அரசியல், கலாசாரம் மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு வழக்கம்போல் அங்கு தடை தொடர்கிறது.

இந்நிலையில், மராட்டியத்தில் டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு 66 ஆக உயர்வடைந்து உள்ளது.  தானேவில் நேற்று ஒரு நபருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.  இதுவரை மொத்தம் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அவர்களில் ரத்னகிரியில் 2 பேர் மற்றும் மும்பை, பீட் மற்றும் ராய்காட் பகுதியில் ஒருவர் ஆவர் என மராட்டிய சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்