மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை நீட்டிக்க காங்கிரஸ் விரும்புகிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

அரசியலமைப்புச் சட்டத்தை தான் நன்றாக புரிந்துகொண்டுள்ளதாக பிரதமர் மோடி பேசினார்.

Update: 2024-04-23 08:06 GMT

ஜெய்ப்பூர்,

நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் கடந்த 19ந்தேதி நடைபெற்று முடிந்த நிலையில், 2வது கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் மாதோபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது;

"உங்கள் அனைவரின் அன்பும், ஆசிர்வாதமும், உற்சாகமும் எனக்கு கிடைத்துள்ளது. உங்கள் அனைவருக்கும் அனுமன் ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 2014-ல் டெல்லியில் பணியாற்ற எனக்கு நீங்கள் வாய்ப்பளித்தபோது, யாரும் நினைத்துப் பார்க்காத முடிவுகளை நாடு எடுத்தது.

ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் ஜம்மு காஷ்மீரில் நமது படைகள் மீது கற்கள் வீசப்பட்டிருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் நாட்டில் குண்டுவெடிப்புகள் நடந்திருக்கும். காங்கிரஸ் ஆட்சியின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருந்தது.

மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை நீட்டிக்க காங்கிரஸ் விரும்புகிறது. ஆந்திராவில் எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீட்டை குறைத்து இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை கொண்டுவர காங்கிரஸ் முயன்றது. காங்கிரஸ் ஆட்சியில் கடவுள் மந்திரம் சொல்வது கூட குற்றமாகிவிடும்.

அரசியல் சாசனத்துடன் காங்கிரஸ் கட்சி விளையாடுகிறது. மதத்தின் பெயரால் பிளவுபட அனுமதிக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தை நான் நன்றாக புரிந்துகொண்டுள்ளேன். நான் அம்பேத்கரை வணங்குகிறேன்." இவ்வாறு அவர் பேசினார்.  

Tags:    

மேலும் செய்திகள்