500 ஆண்டுகால காத்திருப்பு வரும் 22ம் தேதி நிறைவடையும் - உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேசத்தில் ரூ. 15 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Update: 2023-12-30 09:49 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத வழிபாட்டுத்தலமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் வரும் 22ம் தேதி திறக்கப்பட உள்ளது.

அதேவேளை, ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது, அயோத்தி ரெயில் நிலையமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரதமர் மோடி இன்று அயோத்தி சென்றுள்ளார். அவர் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், உத்தரபிரதேச மாநிலத்திற்கு 15 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட பலர் பங்கேற்றனர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கடவுள் ராமர் கோவிலில் வரும் 22ம் தேதி கடவுள் ராமர் சிலை நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் 500 ஆண்டுகால காத்திருப்பு நிறைவடையும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்