பெரம்பலூர் அய்யப்பன் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்

பெரம்பலூர் அய்யப்பன் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது.

Update: 2022-12-11 19:00 GMT

பெரம்பலூரில் தெப்பக்குளம் கிழக்கு கரையில் உள்ள அய்யப்ப சுவாமி கோவிலில் 56-ம் ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகா உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழா நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று காலையில் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. இரவு பூந்தேரில் மேள வாத்தியத்துடன் அய்யப்ப பக்தர்கள் பஜனையுடன் சுவாமி திருவீதி உலா நடந்தது. பின்னர் அய்ய சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப தேர் திருவிழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலையில் 108 கலச அபிஷேகம் நடக்கிறது. மாலை 5.30 மணியளவில் உற்சவர் அய்யப்ப சுவாமி யானை வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். பின்னர் மாலை 6.30 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், அய்யப்பா சேவா சங்கத்தினர், அய்யப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்