லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

நாகூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-18 18:45 GMT

நாகூர்:

நாகூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

லாட்டரி சீட்டு விற்பனை

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அறிவுத்தலின்படி, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாகூர் அம்பேத்கர் நகரில் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளத்தார்.

2 பேர் கைது

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் நாகூர்பீரோடும் தெரு அம்பேத்கர் நகரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ரவிச்சந்திரன் (வயது 38) என்பதும், அவர் விற்பனைக்காக லாட்டரி சீட்டு வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நாகூர் போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்தனர். தொடர்ந்து நாகூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது யானைகட்டி முடுக்குசந்தில் விற்பனைக்காக லாட்டரி சீட்டு வைத்திருந்த மாப்பிள்ளை தெருவை சேர்ந்த முஜாபர்தீன் மகன் சமீம் அன்வர் (29) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்