அரியலூர்: அரசுப்பேருந்து - லாரி மோதி விபத்து - 30-க்கும் மேற்பட்டோர் காயம்
அரியலூரில் அரசுப்பேருந்து - லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.;
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் சுந்தரேசபுரம் அருகே அரசுப்பேருந்து ஒன்று, முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர். காயமடைந்தோர் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.