போதிய டாக்டர்களை நியமிக்க கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

வட்டார மருத்துவமனையில் போதிய டாக்டர்களை நியமிக்க கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-10-16 00:00 IST

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குமிழியும் கிராமத்தில் வட்டார சமுதாய நல மையம் உள்ளது. இங்கு போதிய டாக்டர்கள், நர்சுகள் இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இதனை அறிந்த பா.ஜனதாவினர் வட்டார தலைமை ஆரம்ப சுகாதார மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்