கோவை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி: கனிமொழி எம்.பி

போதைப் பொருள் தடுப்பு துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-29 10:41 GMT

கோவை,.

கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி பிரசாரம் மேற்கொண்டார்.பின்னர் கனிமொழி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

" கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி இருக்கும் என்பதும் தெளிவாகியுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் தி.மு.க. அரசு மக்களுக்கு செய்திருக்கின்ற திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றிருக்கிறது. பா.ஜ.க. மீண்டும் எந்த பொறுப்புக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். கோவையில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. 2-ஆம் இடத்திற்கு தான் போட்டி நடக்கிறது" என்றார்.

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக கூறிய அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, "போதைப்பொருள் தடுப்பு துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதற்கு மத்திய உள்துறை அமைச்சரகம் தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு உதவ மாநில அரசு தயாராக இருக்கிறது" இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்