நெல்லை மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் ஏ.கே.என்.அகமது கபீர் நினைவாக டர்போஸ்டீல், ஏ.கே.என். டிரேடர்ஸ், வாசன் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. அகமது கபீர் தாயார் அசன் பீவி குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எல்.கே.எஸ்.மீரான் மைதீன், தலைமை ஆசிரியர் ஷேக் முகமது, மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், டர்போஸ்டீல் பொதுமேலாளர் ஸ்ரீராம், மஞ்சுநாத், சுதிர், வக்கீல் அப்துல்காதர் ராஜா, ஏ.கே.என்.டிரேடர்ஸ் அஷ்ரப் அலி, டாக்டர் டினா ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.