தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 55 உயர்ந்து ரூ. 5,325-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.42,600 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை மீண்டும் 42,000 கடந்திருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதைபோல ஒரு கிராம் வெள்ளி ரூ.69.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.69,500-க்கு விற்பனையாகிறது.