ஜெயின் சமூகத்தினர் ஊர்வலம்
நெல்லை டவுனில் ஜெயின் சமூகத்தினர் ஊர்வலம் நடந்தது.;
நெல்லை டவுன் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த ஜெயின் சமூகத்தினர் பலர் குடும்பமாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் குரு சப்தமியையொட்டி ராஜேந்திர சூரியஜி பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று நெல்லை டவுன் அம்மன் சன்னதியில் இருந்து ஜெயின் சமூகத்தினரின் ரத ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த ரதத்துக்கு அந்தந்த பகுதியில் ஜெயின் சமூக மக்கள் வரவேற்பு அளித்தனர்.