திருமணமான சிறுமி காதலனுடன் ஓட்டம் - இருவர் கைது

சிறுமியை திருமணம் செய்த ரஞ்சித், காதலித்த உதயகுமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.;

Update:2024-06-11 08:12 IST

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி நாட்டார் தெருவை சேர்ந்தவர் தவசிமுத்து. இவரது மகன் உதயகுமார்(வயது22). இவர் மயிலாடுதுறையை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை கடந்த மாதம் கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி மகன் ரஞ்சித்(24) என்ற வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இதை விரும்பாத சிறுமி, தனது காதலன் உதயகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் உதயகுமார், கடந்த 9-ந் தேதி நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் சென்று, மயிலாடுதுறை அருகே வீட்டில் இருந்த சிறுமியை அழைத்துக் கொண்டு தனது வீட்டுக்கு சென்றார்.

இது குறித்த புகாரின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகம் சார்பில் புகார் தெரிவித்ததையடுத்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த ரஞ்சித், சிறுமியை காதலித்த உதயகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ரஞ்சித்தின் தாய்- தந்தை மற்றும் சிறுமியின் தாய்- தந்தை ஆகிய 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்