துணை வேந்தர்களை அரசே நியமிக்க எதிர்ப்பு: தலைமை செயலாளருக்கு கவர்னர் கடிதம்

துணை வேந்தர் நியமன மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தலைமைச்செயலருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2022-08-20 03:50 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசை நியமிக்க வகை செய்யும் மசோதா கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில் நான்கு மாதங்களாக இந்த மசோதா மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் துணை வேந்தர் நியமன மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தலைமைச்செயலருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் துணைவேந்தர்களை அரசே நியமனம் செய்வது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும் என்றும் துணைவேந்தர் நியமன மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்க கோரியும் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்