நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று காலை 7 மணி நிலவரப்படி கொல்லிமலையில் 15 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதேபோல் நேற்றும் கொல்லிமலை, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, திருச்செங்கோடு, பள்ளிபாளையம், ஜேடர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே விட்டு, விட்டு பரவலாக சாரல்மழை பெய்தது. நாமக்கல் நகரை பொறுத்த வரையில் காலை முதல் மாலை வரை லேசான சாரல்மழை பெய்தது.
இதேபோன்று வெண்ணந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இதனால் மழைநீர் ஆலாம்பட்டியில் ரமேஸ் என்பரவது வீட்டிற்குள் புகுந்தது. இந்த கனமழையின் காரணமாக நீர்நிலைகளில் வெள்ளம் வழிந்தோடியது. இதனால் வெண்ணந்தூர், அளவாய்ப்பட்டி, நடுப்பட்டி, பழந்தின்னிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை மழை பெய்தது.
நாமகிரிப்பேட்டை, சிராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி பகுதிகளில் நேற்று மாலை திடீரென்று மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக பொதுமக்கள் ஆங்காங்கே குடைபிடித்தவாறு செல்வதை பார்க்க முடிந்தது.