பஸ்சின் முன்பக்கம் அமர்திருந்த பெண் பயணிகளை பார்த்துக் கொண்டே சாலைத்தடுப்பில் மோதி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர்...!

ஓட்டுநரின் அலட்சியம் தான் விபத்திற்கு காரணம் என படுகாயமடைந்த பயணிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.;

Update:2022-10-27 17:25 IST

ஈரோடு,

ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பஸ் கரூர் மாவட்டம் குட்டைக்கடை பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பின் மீது ஏறி விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் அலட்சியம் தான் இதற்கு காரணம் என படுகாயமடைந்த பயணிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

ஓட்டுநர் சாலையை சரியாக கவனிக்கவில்லை எனவும் பஸ்சின் முன் வரிசையில் அமர்ந்திருந்த பெண்களை பார்த்து கொண்டே வந்ததால் விபத்து நிகழ்ந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். விபத்து நடந்த உடனே ஓட்டுநர் அங்கிருந்து தப்பிய நிலையில், படுகாயமடைந்தவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்