புர்கினோ பாசோவில் கண்ணிவெடியில் பஸ் சிக்கி 14 பேர் பலி

புர்கினோ பாசோவில் சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் பஸ் சிக்கி வெடித்து சிதறியது.

Update: 2020-01-05 23:15 GMT
வாகடூகு, 

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவர்கள் அப்பாவி மக்களை குறிவைத்து, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேறி வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த நாட்டின் வடமேற்கு பகுதியில் சவ்ரோவ் பிராந்தியத்தில் உள்ள டோநி நகரில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு செல்வதற்காக ஏராளமான மாணவர்கள் இந்த பஸ்சில் பயணம் செய்தனர். அப்போது, சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் பஸ் சிக்கி வெடித்து சிதறியது. இந்த கோர சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்