லைவ் அப்டேட்: உக்ரைன் - ரஷியா போரை நிறுத்த இதைத்தான் செய்ய வேண்டும் - ஜெர்மனி அதிபரின் யோசனை

உக்ரைன் - ரஷியா இடையேயான போரை நிறுத்த ஜெர்மனி அதிபர் யோசனை கூறியுள்ளார்.

Update: 2022-06-17 22:26 GMT

Image Courtesy: AFP

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா 115-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளன்ர்.

இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஜெர்மனி பிரதமர் ஒலப் ஸ்கோல்ஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் உக்ரைன் போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஸ்கோல்ஸ், உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர தலைவர்கள் ரஷிய அதிபர் புதினுடன் நேரடியாக பேசுவது அவசியமாகும்.

புதினுடன் பேசுவது அவசியம். பிரான்ஸ் அதிபர் போரை நிறுத்துவது குறித்து புதினுடன் பேசுகிறான். நானும் புதினுடன் தொடந்து பேசி வருகிறேன்' என்றார்.  

Live Updates
2022-06-18 15:15 GMT

ரஷியா ஏற்றுமதிக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மூலமும் உக்ரைனின் தானிய ஏற்றுமதியை முற்றுகையிட்டதன் மூலமும் உலகை பஞ்சத்தை சந்திக்கும் நிலையில் தள்ளுகிறது என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல் மற்றும் ரஷியா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் ஆகியவை குறித்த விவாதம் வருகிற 20-ந்தேதி அன்று லக்சம்பர்க்கில் நடைபெற உள்ள ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும்.

2022-06-18 11:56 GMT

உக்ரைனின் கருங்கடல் துறைமுக நகரமான மைகோலைவ் நகருக்கு  அதிபர் ஜெலன்ஸ்கி சென்றார். இந்த பயணத்தின் போது, ரஷிய ஏவுகணை தாக்குதலில் உருக்குலைந்த கட்டிடங்களை ஜெலன்ஸ்கி ஆய்வு செய்தார். எனினும், ஜெலன்ஸ்கியின் இந்த பயணம் எப்போது நடந்து என்ற தெளிவான விவரம் குறிப்பிடப்படவில்லை.

2022-06-18 07:56 GMT


உக்ரைனில் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் ரஷியாவின் போரால் 323 குழந்தைகள் உயிரிழப்பு

பிப்ரவரி 24ஆம் தேதி முதல் உக்ரைனில் ரஷியாவின் போர் காரணமாக குறைந்தது 323 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 583 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டுவழக்குரைஞர்கள் ஜெனரல் அலுவலம் தகவல் தெரிவித்துள்ளது.

இருந்தபோதும் போர் நடந்து கொண்டிருக்கும் பகுதிகளிலும், ரஷிய ஆக்கிரமிப்பு பகுதிகளிலும் உயிரிழப்புகள் பதிவு செய்யப்படாததால், புள்ளிவிவரங்கள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-06-18 07:29 GMT

அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகள், உக்ரைன் படைகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக பழைய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஹார்பூன் ரக கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்க முடிவு செய்துள்ளன.

உக்ரைன் வசம் 60 மைல் தூரம் சென்று தாக்கும் நெப்டியூன் வகை கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் குறைந்த அளவே உள்ள நிலையில், டென்மார்க் அரசு பழைய ஹார்பூன் ரக லாஞ்சரை வழங்க முன்வந்துள்ளது.

டிரக்குகளில் இருந்து ஏவும் வகையிலான பிளாக் 1 ஹார்பூன் ஏவுகணை 70 மைல் தூரம் சென்று தாக்கக்கூடிய நிலையில், பிளாக் 2 போயிங் 100 மைல்களுக்கு அப்பால் உள்ள இலக்கையும் தாக்கும் வல்லமை கொண்டது.

இதில் எந்த வகையிலான ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கவுள்ளது என குறிப்பிடப்படவில்லை.  

2022-06-18 07:18 GMT


பொல்டாவா மாகாணத்தின் கிரெமென்சுக்கில் உள்ள சுத்திகரிப்பு ஆலையை ரஷிய ஏவுகணைகள் தாக்கி உள்ளன.

நேற்று ஒரே இரவில் ஆறு முதல் எட்டு ஏவுகணைகள் உள்ளூர் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக பொல்டாவா ஒப்லாஸ்ட் கவர்னர் டிமிட்ரோ லுனின் தெரிவித்துள்ளார். 

2022-06-18 05:59 GMT

ரஷிய போர்க்கப்பல் அத்துமீறி இரண்டு முறை எங்கள் கடற்பரப்பில் எல்லை மீறலில் ஈடுபட்டது - டென்மார்க் தகவல்

ரஷிய போர்க்கப்பல் ஒன்று தங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக டென்மார்க் ராணுவம் தெரிவித்துள்ளது. பால்டிக் கடலில் உள்ள கிறிஸ்டியன்சோ தீவு அருகே நேற்று அதிகாலையில் ரஷிய கொர்வெட் இரண்டு முறை டேனிஷ் கடற்பகுதியில் நுழைந்ததாக டேனிஷ் ஆயுதப் படைகளின் பாதுகாப்புக் கட்டளை தெரிவித்துள்ளது.

2022-06-18 05:13 GMT


புதினுடன் தொடர்ந்து பேசுவது அவசியம் - ஜெர்மனி பிரதமர் கருத்து

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு மத்தியில் சில தலைவர்கள் ரஷிய அதிபர் புதினுடன் நேரடியாகப் பேசுவது "முற்றிலும் அவசியம்" என்று ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்