தைவானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு
தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.;
Image Courtesy: AFP
தைபே,
தைவான் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஹுலியன் மாகாணத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் கட்டிடங்கள் அதிர்ந்தன. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் தைவானின் ஹுலியன் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 14 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.