தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட 2-வது கட்ட நிவாரண பொருட்கள் இலங்கையை சென்றடைந்தது..!

தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட 2-வது கட்ட நிவாரண பொருட்கள் இலங்கையை சென்றடைந்தது.

Update: 2022-06-24 15:23 GMT

கொழும்பு,

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி சென்னையில் இருந்து கடந்த மாதம் கப்பல் மூலம். முதற்கட்டமாக 9,500 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக இரண்டவது கட்டமாக பொருட்கள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி கடந்த 21-ந் தேதி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு புறப்பட்டு சென்றது. இந்த கப்பலில் 14 ஆயிரத்து 700 டன் அரிசி, 250 டன் பால் பவுடர், 50 டன் மருந்து பொருட்கள் என மொத்தம் 15 ஆயிரம் டன் நிவாரண பொருட்களுடன் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் 2-வது கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட 14,700 டன் அரிசி, 250 டன் பால் பவுடர் ஆகியவை இன்று கொழும்பு துறைமுகம் சென்றடைந்தது. நிவாரண பொருட்கள் அனைத்தும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இலங்கை அரசிடம் ஒப்படைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, இலங்கை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லா, வர்த்தக அமைச்சர் நளின் ஃபெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், ராதாகிருஷ்ணன், உதய குமார், அங்கஜன் ராமநாதன், செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்