லைவ் அப்டேட்ஸ்; கொந்தளிக்கும் இலங்கை; பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீவைப்பு

சுதந்திரத்திற்கு பிறகு ஏற்பட்ட இப்படி ஒரு பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்கள், தங்கள் கோபத்தை ஆட்சியாளர்கள் மீது காட்டத்தொடங்கினர்.;

Update:2022-07-09 14:44 IST

பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கையில் மீண்டும் மக்கள் கிளர்ச்சி வெடித்துள்ளது. அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். இதனால், இலங்கையில் மீண்டும் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை நிலவும் சூழல் குறித்த அண்மைச்செய்திகளை கீழ் காணலாம்.

Live Updates
2022-07-10 03:40 GMT



2022-07-10 02:18 GMT



2022-07-09 19:47 GMT

கோத்பய ராஜபக்‌சே வீட்டின் நீச்சல் குளம், குளியலரையில் போராட்டக்காரர்கள் குளிக்கும் வீடியோக்கள், ஜிம்மில் பயிற்சி செய்யும் வீடியோக்கள், சமையலரைக்குள் புகுந்து சாப்பிடும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதேபோல் கோட்டாபயாவின் கட்டில் மெத்தையில் படித்திருந்த நபர், "நன்றி அதிபரே, நாங்கள் உங்கள் மெத்தையில் படுத்துள்ளேன்." என்று பேசி வீடியோ வெளியிட்டு உள்ளார்.

2022-07-09 17:12 GMT

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வரும் 13-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக உள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தகவல் தெரிவித்துள்ளார்.

2022-07-09 16:00 GMT

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2022-07-09 13:32 GMT

பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கை மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக மீண்டும் வெகுண்டெழுந்தனர். இன்று இலங்கை அதிபர் மாளிகையை நோக்கி வந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், தப்பித்தோம் பிழைத்தோம் என மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே ஒடினார்.

இலங்கை கடும் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலக வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், அனைத்துக் கட்சித்தலைவர்களின் கோரிக்கையை ஏற்று எனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

2022-07-09 12:43 GMT



2022-07-09 11:56 GMT

கொழும்பு,

இலங்கையில் மக்கள் போராட்டம் உச்ச கட்டம் அடைந்துள்ள நிலையில் அரசமைப்பு விதிகளின் படி இலங்கை சபாநாயகர் தற்காலிக அதிபராக வாய்ப்பு உள்ளது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என்று அனைத்துக் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அப்போது இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தற்காலிக அதிபராக பதவியேற்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சி தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். 

2022-07-09 11:28 GMT

மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து, அதிபர் மாளிகை பாதுகாப்பு பணியில் இருந்து போலீசாரும் விலகினர். அதிபர் மாளிகை உள்ளே போராட்டக்காரர்கள் நுழைந்தனர். அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஒடியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிபர் மாளிகையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார்களை வீடியோ எடுத்து போராட்டக்காரர்கள் வெளியிட்டுள்ளனர். இதேபோல் அங்குள்ள நீச்சல் குளத்தில் போராட்டக்காரர்கள் குளிப்பது போன்ற வீடியோவும் வெளியாகி உள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்