ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பயணம்

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் இரு நாட்டு கல்வி மந்திரிகளும் இன்று கையெழுத்திட்டனர்.;

Update:2023-11-01 21:09 IST

ஐக்கிய அரபு அமீரகம்,

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறைக்கான மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று சென்றுள்ளார். அவரை ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி மந்திரி அகமது அல் பலாசி முறைப்படி வரவேற்றார்.

இதன்பின்னர் அவர்கள் இருவரும் கல்வி மற்றும் திறன் மேம்பாடு துறையில் ஒருங்கிணைதல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றி ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் இரு நாட்டு மந்திரிகளும் கையெழுத்திட்டனர். இதன்பின்னர், இந்தியா சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி மந்திரி அகமது அல் பலாசிக்கு, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் சால்வை அணிவித்து, புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்