உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா பயணம் - வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ஜோ பைடன் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Update: 2023-09-21 23:39 GMT

Image Courtesy : AFP

வாஷிங்டன்,

உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன. இதனிடையே அமெரிக்க அரசு மேலும் தங்களுக்கு ராணுவ உதவிகளை வழங்க வேண்டும் என ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்து வருகிறார்.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்ற ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா ஆகியோரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து ஜோ பைடன் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு அதிபர் ஜோ பைடன், அதிபர் ஜெலன்ஸ்கி இடையே நடைபெறும் மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்