''பிக்பாஸ் என் கெரியரை நாசமாக்கிவிட்டது''....வைரலாகும் இளம் நடிகையின் அதிர்ச்சியூட்டும் கருத்து
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடன் தனது கெரியர் முடிந்துவிட்டதாகக் கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார் இந்த நடிகை.;
சென்னை,
பிக்பாஸ் ஷோ தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே எட்டு சீசன்கள் நிறைவடைந்திருக்கிறது.
இதற்கிடையில், பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடன் தனது கெரியர் முடிந்துவிட்டதாகக் கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார், ஒரு நடிகை. அது யார் தெரியுமா?
அவர் வேறு யாருமல்ல, ''சீத்தம்மா வகிட்லோ சிரிமல்லே செட்டு'' படத்தின் மூலம் புகழ் பெற்ற தேஜஸ்வி மடிவாடா. இவர் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 இல் பங்கேற்றார். தனது நடிப்பால் பார்வையாளர்களை மகிழ்வித்தார். பிக் பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு இந்த நடிகை படங்களில் பிஸியாக இருப்பார் என்று அனைவரும் நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை.
தற்போது, இவர் புகைப்படங்கள் மற்றும் ரீல்களை வெளியிட்டு சமூக ஊடகங்களிலும் பிரபலமாக இருக்கிறார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், "பிக் பாஸைப் பார்ப்பவர்கள் நம்மைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் நம்மைப் பற்றி எதிர்மறையான கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். அதனால்தான், இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் வாய்ப்புகளைத் தரத் தயங்குகிறார்கள். பிக்பாஸ் கேம் ஷோவில் பங்கேற்றது எனது வாழ்க்கையை நாசமாக்கிவிட்டது" என்றார். இந்தக் கருத்துகள் இப்போது வைரலாகி வருகின்றன.