''பாகுபலிக்குப் பிறகு இந்த படத்திற்குதான் அது கிடைத்திருக்கிறது''- இயக்குனர் ராம் கோபால் வர்மா
பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா ஒரு சுவாரஸ்யமான பதிவை வெளியிட்டு இருக்கிறார்;
சென்னை,
தேஜா சஜ்ஜா ஹீரோவாக நடித்திருக்கும் பான் இந்திய திரைப்படம் 'மிராய்'. கார்த்திக் கட்டமனேனி இயக்கிய இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
ரிலீஸுக்கு முன்பே பெரும் எதிர்பார்புகளை பெற்ற இந்தப் படத்தில் மஞ்சு மனோஜ் வில்லனாகக் நடித்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் போலவே, 'மிராய்' படத்திற்கு நேர்மறையான விமர்சனம் கிடைத்து வருகிறது. அவரின் முந்தைய படமான ''அனுமான்'' படத்தைப் போலவே இப்படமும் சூப்பர் ஹிட் ஆகும் என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில், பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா ஒரு சுவாரஸ்யமான பதிவை வெளியிட்டுருக்கிறார். மிராய் போன்ற ஒரு பெரிய படத்தை கொடுத்ததற்கு தேஜா சஜ்ஜா மற்றும் கார்த்திக் கட்டமனேனி ஆகியோரை அவர் வாழ்த்தினார்.
பாகுபலிக்குப் பிறகு வேறு எந்த படமும் இவ்வளவு பாராட்டைப் பெற்றதில்லை என்றும் விஎப்எக்ஸ் மற்றும் கதை இரண்டும் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாகவும் அவர் பாராட்டினார். ராம் கோபால் வர்மாவின் இந்த கருத்துகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.