ரீ-ரிலீஸாகும் அஜித்தின் “அமர்க்களம்”
அஜித், ஷாலினி நடிப்பில் உருவான ‘அமர்க்களம்’ திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸாக உள்ளதாக இயக்குநர் சரண் அறிவித்துள்ளார்.;
நடிகர் அஜித் 1993-ல் வெளிவந்த 'அமராவதி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் 'ஆசை', 'காதல் கோட்டை', 'வாலி', 'அமர்க்களம்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' போன்ற படங்கள் அவருக்கு பெரிய ரசிகர்களைப் பெற்றுத்தந்தது.
1999ம் ஆண்டு வெளியான ‘அமர்க்களம்’ படம், ஆக்ஷன் மற்றும் காதல் காட்சிகளால் நிரம்பியிருந்த படமாகும். இதில் ஷாலினி அஜித்திற்கு ஜோடியாக நடித்திருப்பார். அஜித்குமாரின் ரசிகர்களுக்கு பிடித்த படங்களுள் ஒன்று, அமர்க்களம். இந்த படத்தால்தான் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரை வாழ்க்கையிலும் பெரிய திருப்பமே ஏற்பட்டது. இதில் ரகுவரன், ராதிகா, நாஸர், அம்பிகா, வினு சக்ரவர்த்தி, சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர். அஜித்தின் 25 வது திரைப்படமாகும்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதினார், பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தன. அமர்க்களம் திரைப்படம் தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. ஒளிப்பதிவாளர் வெங்கடேஷிற்கு இது முதல் படமாகும்.
நடிகை ஷாலினியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘அமர்க்களம்’ ரீ-ரிலீஸ் அறிவிப்பை இயக்குநர் சரண் வெளியிட்டுள்ளார்.
ஷாலினி-அஜித் நடித்த‘அமர்க்களம்’ படம் வெளியாகி, 26 வருடங்களை கடந்தது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் 2026 பிப்ரவரி 12ம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.