ஒரு காலத்தில் பள்ளி ஆசிரியை...இப்போது திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த நடிகை - யார் தெரியுமா?

தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா போன்ற நட்சத்திர ஹீரோக்களுடன் நடித்தார்.;

Update:2025-09-16 13:19 IST

சென்னை,

மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள குழந்தையை அடையாளம் தெரிகிறதா?. அவர் தமிழ், தெலுங்கு சினிமா உலகில் ஒரு முன்னணி கதாநாயகி. ஒரு காலத்தில் தொடர் வெற்றிப்படங்களால் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். குறுகிய காலத்திலேயே நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.

தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தெலுங்கில் நாகார்ஜுனா, பிரபாஸ், அல்லு அர்ஜுன் போன்ற நட்சத்திர ஹீரோக்களுடன் நடித்தார். அடுத்தடுத்து படங்களில் நடித்து மக்களை மகிழ்வித்த இவர், இப்போது கொஞ்சம் குறைத்துவிட்டார். அவர் வேறு யாருமில்லை, அனுஷ்கா ஷெட்டிதான்.

தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. நாகார்ஜுனா மற்றும் சோனு சூட் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ''சூப்பர்'' படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். தமிழில் மாதவன் நடித்த ''ரெண்டு'' படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து, ரஜினிகாந்த், விஜய், சூர்யா, அஜித், கார்த்தி உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் நடித்தார். 'அருந்ததி' இவரது கெரியரில் முக்கிய படமாக அமைந்தது. இன்றும் இப்படத்திற்கு ரசிகர்கள் ஏராளம்.

இவர் திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு என்ன செய்துகொண்டிருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம். இவர் நடிகையாவதற்கு முன்பு பெங்களூருவில் உள்ள ஈஸ்ட்வுட் பள்ளியில் புவியியல் ஆசிரியராக பணியாற்றினார். மேலும், யோகா பயிற்றுவிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

சமீபத்தில், அனுஷ்கா 'காதி' திரைப்படத்தில் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் பெரிய அளவில் ஈர்க்கப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்