பொய்யான போதை பொருள் வழக்கினால் தற்கொலை செய்ய நினைத்தேன்- நடிகை சஞ்சனா கல்ராணி

எந்தவித தவறும் செய்யாத என் மீது அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டது.;

Update:2025-09-10 07:10 IST

நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியும் நடிகையுமான சஞ்சனா கல்ராணி தெலுங்கு பிக்பாஸ்-9 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய சஞ்சனா கல்ராணி, போதைப் பொருள் வழக்கில் நான் அநியாயமாக கைது செய்யப்பட்டேன்.

அந்த நேரத்தில் நான் சாக வேண்டும் என நினைத்தேன். எந்தவித தவறும் செய்யாத என் மீது குற்றம் சாட்டப்பட்டது. தவறான குற்றச்சாட்டுகளால் என் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. பொய் வழக்கினால் மனதளவில் பல வேதனைகளை அடைந்தேன். அந்த நேரத்தில் அஜீத்பாஷாவை திருமணம் செய்து கொண்டேன். என் திருமண செய்தியை கூட என்னால் மகிழ்ச்சியாக வெளியில் சொல்ல முடியாமல் போனது. என் கணவர் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். அவர்தான் இப்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்னை அனுப்பி வைத்தார்.

இதன் மூலம் என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சஞ்சனா எப்படிபட்டவர் என்பதை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நிச்சயம் நிரூபிப்பேன் என அவர் மேடையில் கண் கலங்கினார்.

சஞ்சனா கல்ராணி 2020-ம் ஆண்டு மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் கைதானார். 3 மாதங்கள் சிறையில் இருந்த சஞ்சனா வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிரபராதி என அவரை விடுவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்