சில விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டிய நேரம் இது- ஸ்வேதா மேனன்
மோகன்லால் மற்றும் மம்முட்டி அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன் என ஸ்வேதா மேனன் கூறியுள்ளார்.;
கொச்சி,
மலையாள நடிகர் சங்க அம்மா அமைப்பின் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்வு செய்யப்பட்டார். நடிகர் சங்க வரலாற்றின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெற்ற ஸ்வேதாமேனன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சில விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டிய நேரம் இது. மோகன்லால், மம்முட்டி, தலைமையிலான அணிகளில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். கற்றுக் கொண்ட விஷயங்களை சில மாற்றங்கள் செய்து முன்னோக்கி எடுத்து சொல்ல முயற்சிக்க வேண்டிய நேரம் இது என நினைக்கிறேன்.
அம்மா அமைப்பு சரிந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து மோகன்லால் விலகியது அதிர்ச்சியாக இருந்தது. எதையும் அவர் எளிதில் விட்டு கொடுக்கும் நபர் அல்ல. வரலாற்றை மீண்டும் எழுத நான் வர வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.