''அவருடன் நடிக்க ஆசை''...நடிகை ரித்திகா எந்த ஹீரோவுடன் நடிக்க விரும்புகிறார் தெரியுமா?
நடிகை ரித்திகா நானியின் ''ஹாய் நன்னா'' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார்.;
சென்னை,
நடிகை ரித்திகா நாயக், விஷ்வாக் செனின் "அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம்" படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர். அடுத்து நானியின் ''ஹாய் நன்னா'' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். தற்போது மிராய் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதற்கிடையில், எந்த ஹீரோவுடன் நடிக்க விருப்பம் என்பதை ரித்திகா நாயக் வெளிப்படுத்தியுள்ளார். அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகை என்று கூறிய அவர், அவருடன் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார். எந்த மாதிரியான படமாக இருந்தாலும், எந்த வேடமாக இருந்தாலும், அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று கூறினார். இவரின் இந்தக் கருத்து வைரலாகி வருகிறது.
மறுபுறம், ரித்திகா நாயக் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் ''டூயட்''. மற்றொன்று வருண் தேஜ் நடிக்கும் விடி15. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.