பாடல் பாடி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்த அமீர்கான்... - வைரலாகும் வீடியோ

நடிகர் அமீர்கான் பாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.;

Update:2025-09-07 17:03 IST

சென்னை,

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் அமீர்கான், எப்போதும் ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் ஆச்சரியப்படுத்தி வரும்நிலையில், தற்போது தனது பாடல் திறைமையால் ஆச்சரியத்தில் உறைய வைத்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் அமீர்கான் பாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்றது.

கடைசியாக ''கூலி'' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்த அமீர்கான், 'சீதாரே ஜமீன் பர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் தற்போது யூடியூப்பில் உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்