மனச்சோர்வடைந்தால் என்ன செய்வீர்கள்?...ஸ்ரீலீலா சொன்ன ரகசியம்

ஸ்ரீலீலா, ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் உரையாடினார்.;

Update:2025-09-11 00:17 IST

சென்னை,

இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரீலீலா. பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தனது ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் மனச்சோர்வு குறித்து கேட்டார்.

அதற்கு ஸ்ரீலீலா சில பதில்களை கூறினார். " உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரை கட்டிப்பிடிங்கள். இசையைக் கேளுங்கள். இது எவ்வளவு உதவும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதைத்தான் நான் செய்கிறேன்" என்றார்.

ஸ்ரீலீலா தற்போது பவன் கல்யாணுடன் ''உஸ்தாத் பகத்சிங்'' படத்தில் நடித்து வருகிறார். மேலும், தமிழில் ''பராசக்தி'', கார்த்திக் ஆர்யனுடன் ஒரு பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். விரைவில் ரவி தேஜாவுடன் அவர் நடித்துள்ள ''மாஸ் ஜாதரா'' படம் திரைக்கு வர உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்