கவினின் “கிஸ்” படத்தில் விஜய் சேதுபதியின் குரல்
சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ‘கிஸ்’ படம் வருகிற 19ந் தேதி வெளியாகிறது.;
சென்னை,
நடிகர் கவின் 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வெளியான 'லிப்ட்', 'டாடா' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கடைசியாக கவின் நடித்திருந்த 'பிளடி பெக்கர்' திரைப்படம் கலவையான வரவேற்பையே பெற்றது.
இதற்கிடையில் கவின் 'கிஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். பிரபல நடன இயக்குனரான சதீஷ் இயக்கிய இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக 'அயோத்தி' படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படம் வருகிற 19ந் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலானது. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் கிஸ் படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ் வழங்கியுள்ளது.
இப்படத்தின் டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. ஒரு லிப்லாக் முத்தம் கொடுக்கும் காதலர்களை பார்த்தால் அவர்களது காதலின் முடிவு என்ன மாதிரி இருக்கும் என கவினுக்கு தோன்றுகிறது. இந்த பிரச்சனையை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளனர்.
படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதை சொல்லியாக அவரது குரலை கொடுத்துள்ளார். இதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.