நெல்லை இஸ்கான் கோவிலில் சிறப்பு தீப திருவிழா.. பக்தர்கள் நேரடியாக பகவானுக்கு ஆரத்தி காட்டலாம்
தீபாவளியின் முழு பலனை பக்தர்கள் பெறுவதற்காக திருநெல்வேலி இஸ்கான் கோவிலில் சிறப்பு தீப திருவிழா நடைபெறுகிறது.;
இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வழிபடுகிறார்கள். அதேபோல் கோவில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளிலும் ஏராளமான மக்கள் பங்கேற்று இறைவனை தரிசனம் செய்கின்றனர்.
அவ்வகையில் தீபாவளியின் முழு பலனை பக்தர்கள் பெறுவதற்காக திருநெல்வேலி இஸ்கான் கோவிலில் சிறப்பு தீப திருவிழா நடைபெறுகிறது. சிறப்பு பூஜையின்பொது பகவானுக்கு பக்தர்கள் நேரடியாக நெய் தீப ஆரத்தி காட்டுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தீப ஆரத்தி நடைபெற்றது.
இதேபோல் மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு தீப ஆரத்தி நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த நேரத்தில் இஸ்கான் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் கலந்துகொள்வதுடன், கிருஷ்ண பலராமருக்கு நெய் தீப ஆரத்தி காட்டி பகவானின் திருவருள் பெறலாம்.
தீபத் திருநாளில் பக்தர்கள் குடும்பத்துடன் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று பகவானை வேண்டி "நெய் தீப ஆரத்தி" காட்ட வேண்டும் என்றும், “ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே” என்ற பதினாறு வார்த்தைகளடங்கிய மகாமந்திரத்தை குறைந்தபட்சம் 108 முறையாவது உச்சரிக்க வேண்டும் என இஸ்கான் கேட்டுக்கொண்டுள்ளது.