விமான பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சக ஊழியர் - அதிர்ச்சி சம்பவம்

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்தார்;

Update:2025-07-20 14:48 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் 29ம் தேதி லண்டன் பயணத்தை முடித்துவிட்டு மும்பை திரும்பியுள்ளார்.

அப்போது, அந்த பணிப்பெண்ணுடன் விமானத்தில் பணிபுரியும் ஆண் நபரான சக ஊழியரும் லண்டன் பயணத்தை முடித்துவிட்டு திரும்பியுள்ளார். இதையடுத்து, அந்த இளம்பெண்ணை அந்த நபர் தானேவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு வைத்து இளம்பெண்ணை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விமான பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த விமான ஊழியரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்