ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட கார்; 3 பேர் பலி
ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பேரை உயிருடன் மீட்டனர்.;
காந்தி நகர்,
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டம் கரியனி கிராமத்தில் ஆற்றோரம் உள்ள சாலையில் நேற்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 9 பேர் பயணித்தனர்.
அப்போது, கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் கார் அடித்து செல்லப்பட்டது. அந்த காரில் 9 பேரும் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர், கிராமத்தினர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 4 பேரின் நிலை என்ன? என்று தெரியாத நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.