மராட்டியம்: 24 அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Courtesy: AI
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பை புறநகர் மாவட்டம் தஹிசார் கிழக்கு சாந்தி நகர் பகுதியில் 24 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கல் வசித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் இன்று மாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு மீட்புக்குழுவினர் விரைந்து சென்று பற்றி எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.