இந்தியாவும்- அமெரிக்காவும் ராணுவ கட்டமைப்பில் அடுத்த 10 ஆண்டுகள் இணைந்து செயல்பட சம்மதம்

இரு நாடுகளும் இணைந்து எப்.414 என்ஜின்களை தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-07-04 00:13 IST

புதுடெல்லி,

இந்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ஹெக்சேத்துடன் செவ்வாய்க்கிழமை டெலிபோனில் உரையாடினார். அப்போது, இந்தியாவுக்கான பாதுகாப்பு தளவாட விற்பனை மற்றும் ராணுவ தொழிற்சாலை கூட்டுறவு மேம்பாட்டை வலுப்படுத்துவது குறித்து உரையாடினார்கள். முந்தைய ஒப்பந்தப்படி, தேஜாஸ் இலகு ரக போர் விமானத்துக்கான சக்திமிக்க எப்.404 என்ஜின்களை விரைவாக தயாரித்து வழங்க ராஜ்நாத்சிங் வலியுறுத்தினார். மேலும் இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்துடன் மற்றும் அமெரிக்கவின் ஜி.இ. ஏரோஸ்பேஸ் நிறுவனம் இணைந்து இந்தியாவில் எப்.414 என்ஜின்களை தயாரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதுபோன்ற கூட்டுறவில், இருநாடுகளும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இணைந்து செயல்படுவதற்கும் சம்மதம் தெரிவித்தனர். அவர்களின் அடுத்த சந்திப்பில் இது பற்றிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. உரையாடலுக்கு அடுத்தநாள் (புதன்கிழமை) அமெரிக்காவின் பாதுகாப்பு தலையகமான பென்டகன் வெளியிட்ட அறிக்கையிலும் இதுபற்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்