அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததற்கு உண்மையான காரணமே வேறு: கார்த்தி சிதம்பரம்

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால் மட்டுமே வரி விதிக்கப்படவில்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.;

Update:2025-08-09 15:04 IST

புதுடெல்லி,

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி அதிபர்  விதித்த 25 சதவீத வரி, கடந்த 7-ம் தேதி அமலுக்கு வந்தது. அத்துடன், டிரம்ப் மேலும் 25 சதவீத வரி விதித்து, வரியை 50 சதவீதமாக உயர்த்தினார். இந்தியா-அமெரிக்கா இடையே ஏற்கனவே வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இந்த வரி விதிப்பை டிரம்ப் அறிவித்தார்.

நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில், அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கக் குழு இம்மாதம் 25-ம் தேதி இந்தியா வருவதாக இருந்தது. இந்தியாவுக்கு எதிராக வரி யுத்தத்தை அமெரிக்கா நடத்தி வரும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறாது என்று டிரம்ப் கூறியிருக்கிறார். ரஷியாவுடன் எண்ணெய் கொள்முதல் செய்வதாக கூறி டிரம்ப் இந்த வரி விதிப்பை அமல்படுத்தி வருகிறார். 

இந்த நிலையில், இந்தியா மீது அதிகப்படியான வரிகளை அமெரிக்கா விதித்திருப்பதற்கு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது மட்டுமே காரணம் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:"

இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி, நாம் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால் மட்டுமே விதிக்கப்படவில்லை. ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் கூட ரஷியாவுடன் வர்த்தகம் செய்கின்றன. இதையும் தாண்டி வேறு கொடூரமான காரணம் உள்ளது. பாகிஸ்தான் ராணுவம், அதன் வணிக நிறுவனங்கள் மூலம் டிரம்ப் நிர்வாகத்தினருடன் மிக வலுவான வணிக உறவுகளைக் கொண்டிருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.முன்பு எப்போதும் இல்லாத வகையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி முனிர், அமெரிக்காவுக்கு இரண்டாவது முறையாகச் செல்கிறார்.

அமெரிக்காவின் நண்பனாக டிரம்ப் செயல்படப் போவதில்லை. நல்லுறவு இல்லை என்றால், பின்வாசல் வழியாகப் பேச்சுவார்த்தையும் இருக்காது. ஆனால், நாம் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம். அமெரிக்காவுக்கு நாம் தேவை; நமக்கு அமெரிக்கா தேவை. வாடிக்கையாளர்களை உடனடியாக ஏற்படுத்திக் கொள்வது நமக்கு எளிதானதல்ல; அதேபோல, அமெரிக்காவுக்கும் பொருட்களை சப்ளை செய்வோரைக் கண்டறிவது எளிதானதல்ல" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்