வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த காதலர்கள்.. திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு.. அடுத்து நடந்த கொடூரம்

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதல் திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.;

Update:2025-09-26 11:52 IST

கோப்புப்படம்

கோலார் தங்கவயல்,

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா டேகல் புரசபை செட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 19). இவரும் பனமாகனஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுவேதா (18) என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர்.

இதுகுறித்து இருவரின் பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதல் திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் ஒன்று சேர மாட்டோம் என நினைத்த சதீஷ், சுவேதா ஆகியோர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று மதியம் பங்காருபேட்டை ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பேடராயனஹள்ளி ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்திற்கு காதல் ஜோடியான சதீஷ், சுவேதா ஆகியோர் வந்தனர். அவர்கள் அந்த வழியாக பெங்களூருவை நோக்கி வந்த பயணிகள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து என்ஜின் டிரைவர் பங்காருபேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சதீஷ், சுவேதா ஆகியோர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால். அவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சதீஷ், சுவேதா ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பங்காருபேட்டை ரெயில் நிலையம் அருகே 1 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது. இந்த தற்கொலை குறித்து பங்காருபேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்