பிரதமர் மோடி இம்மாத இறுதியில் சீனா பயணம்
சீன வெளியுறவுத்துறை மந்திரி அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்;
டெல்லி,
சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் ஹு 2 நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, எல்லை விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வாங் ஹு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
இதனிடையே, இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு உள்ளது. இந்த கூட்டமைப்பின் நட்டப்பாண்டு மாநாடு சீனாவின் தியன்ஜன் நகரில் வரும் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி இம்மாத இறுதியில் சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். 31ம் தேதி சீனா செல்லும் பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த பயணத்தின்போது சீன அதிபரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது வர்த்தகம், இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவர் என தகவல் வெளியாகியுள்ளது.