அமெரிக்க சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்து நாடு திரும்பினார் ராகுல் காந்தி

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது;

Update:2025-04-24 08:25 IST

ஸ்ரீநகர், 

காஷ்மீரின் பஹல்காமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அட்டாரி - வாகா எல்லையை மூடுவது என பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தனது பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியுள்ளார். இன்று நடைபெற உள்ள முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஏதுவாக நாடு திரும்பியிருப்பதாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்