பாகிஸ்தான் தாக்குதலில் இதுவரை 13 இந்தியர்கள் பரிதாப பலி
ஜம்மு காஷ்மீரின் பூஞ்சில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் சிக்கி இதுவரை 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் - 05.05.25 முதல் 11.05.25 வரை
திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன
தோல்வி பயத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை: ரிசல்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9 மணி அளவில் வெளியானது. இந்த தேர்வில் மாணவி ஆர்த்திகா இரண்டாவது குரூப் படித்து வந்துள்ளார். அதில் ஒவ்வொரு பாடத்திலும் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார்.
நிர்வாகத் திறனற்ற நான்காண்டு ஆட்சி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 2021 முதல் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை 'ஸ்டாலின் மாடல் ஆட்சி' என்று ஆளுங்கட்சியினர் புகழ்ந்தாலும், பொதுமக்கள் நிர்வாகத் திறமையற்ற ஆட்சி, நிதிப் பற்றாக்குறை, கடன் வாங்குவதில் முதலிடம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் கேந்திரமாக மாறிய தமிழ் நாடு, தினசரி கொலைகள் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை, கடுமையாக விமர்சித்து வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள், வருகைப்புரியாத தேர்வர்கள், தனித்தேர்வர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு ஜூன் 25-ந்தேதி முதல் துணைத்தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தோல்வியடைந்த மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவே துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அமித் ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தியது.
இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தாக்கி அழித்த 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கமளிப்பதற்காக, டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிலையில் அனைத்துகட்சி கூட்டம் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் தொடங்கி உள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்
திருச்சி மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்.
விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. - விஜய்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில், "பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
"ஆபரேஷன் சிந்தூர்" - பொய் செய்தி பரப்பிய சீன அரசு ஊடகத்திற்கு இந்தியா கண்டனம்
இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக, சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. சீன அரசின் ஊடகமாக குளோபல் டைம்ஸ்-ல் இந்த செய்தி வெளியானதாக தெரிகிறது.