தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்

கோவில்பிள்ளைவிளை, பால்பண்ணை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.;

Update:2025-06-11 12:34 IST

தூத்துக்குடியில் தாளமுத்துநகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவில்பிள்ளைவிளை, பால்பண்ணை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் பேண்ட் பாக்கெட்டில் விற்பனைக்காக கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸ் விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி வெற்றிவேல்புரம், சிவாரஜபுரத்தைச் சேர்ந்த பார்த்திபன் மகன் மரியபிலிப் மார்க்லின் (வயது 26), கலைஞர்நகர் ஆறுமுகசாமி மகன் வேல்குமார்(25) எனத் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 20 கிராம் கஞ்சா மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்